Saturday, September 26, 2015

தீப்புண் வடு மறைய

தீப்புண் ஆறிய பிறகும் புண் இருந்த இடத்தில தோல் நிறம் மாறி வெள்ளையாக இருக்கும். வேப்பம்பட்டையை கசாயம் செய்து பாட்டிலில் வைத்து குலுக்கினால் நுரைவரும், அதை புண்ணின் வடு மீது தடவிவர தோலின் நிறம் மாறி பழைய நிறம் கிடைக்கும்.

பாட்டி வைத்தியம்.,

கை கால் வலி குணமாக

துத்தி இலைகளை நல்லெண்ணையில் சுடவைத்து படபடவென பொரிந்து மொறு மொறுப்பு ஆனவுடன் இறக்கி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். கை கால் வலிக்கு தடவினால் வலி குறையும்.

பாட்டி வைத்தியம்.,

முக சுருக்கம் மறைய

முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வர முகசுருக்கம் மறையும், சருமம் மென்மையாகும்

பாட்டி வைத்தியம்.,

Tuesday, July 21, 2015

இலந்தைப்பழம்

இலந்தைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. இலந்தைப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.


பாட்டி வைத்தியம்.,

மந்தம் அஜீரணம் குணமாக

கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு ஆகியவற்றையும் பொடியாக்கி கலந்து வைத்து கொள்ளவும்

சோற்றுடன் 1 ஸ்பூன் அந்த பொடியை பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.

பாட்டி வைத்தியம்.,

Friday, June 5, 2015

முகப்பரு நீங்க

வெள்ளைப்பூண்டையும், துத்தி இலையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி கொள்ளவும். தினசரி பரு மீது தடவினால் முகப்பரு நீங்கும்.

பாட்டி வைத்தியம்.,

இளமையுடன் வாழ

நெல்லிக்காயை கொட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி, தினமும் 1/4 கரண்டி நெல்லி பொடி சாப்பிட்டு வந்தால் இளமை நீடிக்கும்.

பாட்டி வைத்தியம்.,

உடல்வலி குணமாக

வில்வ இலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குணமாகும்.

பாட்டி வைத்தியம்.,

Monday, December 29, 2014

உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுகளை நீக்க



ஒருபிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட வேண்டும்.


பாட்டி வைத்தியம்.,

குடலை சுத்தப்படுத்த



வில்வபழத்தின் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட, வில்வபழம் குடலை சுத்தப்படுத்தும்.



பாட்டி வைத்தியம்.,